கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வீட்டின் மீது மோதி விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சிங்கம்புணரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்புலன்ஸை பழனி முருகன்(28) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் செவிலியரானன கவிதா என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் எஸ்.வி மங்கலம் கிழக்கிபட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியது.
மேலும் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது மோதி ஆம்புலன்ஸ் நின்றது. இந்த விபத்தில் பழனி முருகனும், கவிதாவும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.