Categories
தேசிய செய்திகள்

வீட்டின் முன்பு திடீரென உருவான 30 அடி பள்ளம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முபீன் என்பவரின் வீட்டில் ஜபி என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.அவர் வீட்டின் முன் பகுதியில் கடந்த செப்டம்பர் 29 ஆம்தேதி  இரவு திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. அதனால் ஜபி பீதியில் இருந்தார். நேற்று மேலும் பல அடிகளுக்கு பள்ளம் ஏற்பட்டதையடுத்து அடுத்து  தீயணைப்புத் துறையினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஜபி வீட்டின் முன் பகுதியில் 30 அடியில் பள்ளம் ஏற்பட்டது. ஏற்கனவே கொட்டிகெரேயில் இருந்து நாகசந்திரா வரை மெட்ரோ ரயில் பாதைக்காக சுரங்கப்பாதை உருவாக்கும் பணியானது பல மாதங்களாக நடைபெற்றிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னாள் பணி முடிவடைந்தநிலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராட்சத இயந்திரமும் வெளியே வந்தது.

எனவே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டதால் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியின் வீடுகளில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு போன்றவற்றை மூடுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆணையிட்டது. அதேபோல் ஜபி வீட்டில் இருந்த கிணற்றையும் மெட்ரோ அதிகாரிகள் மூடினர். இப்போது அந்தக் கிணறு இருந்த இடத்தில் 30 அடிக்கும் மேலாக பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் பணிகள் நடந்துள்ளதால் அடிக்கடி வீட்டில் அதிர்வுகள் ஏற்படுவதாக ஜபி மற்றும் முபீன் குற்றசாட்டுகள் வைத்துள்ளனர்.

முக்கியமாக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையால் தான் என்னுடைய வீட்டின் முன்பக்கத்தில் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த பள்ளத்தால் வீடு இடிந்து விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் என்னுடைய வீட்டை மெட்ரோ ரயில் நிர்வாகம் வைத்துக்கொண்டு வீட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை எடுத்து அங்கு வசித்து வந்த ஜபி குடும்பத்தினரை வேறு பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஜபி வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது நிர்வாக இயக்குனர் அந்தப்பகுதியை கான்கிரீட் போட்டு மூடப்படும் என்றும், முழுவதும் சேதம் அடைந்திருந்தால் ஜபிக்கும் புதிய வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |