Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன் பக்க கதவை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளை …!!

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் சமையல் மாஸ்டர் வீட்டில் திருடப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்பட்டி மாவட்டம் அருகே கழுகுமலை செந்தூர்நகர் தெருவை சேர்ந்தவர் சங்கர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் கதவை திறந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 1.25 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் 3 பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்றனர். காலையில் இதனை பார்த்த சங்கர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கைரேகை நிபுணர் கார்த்திகா பரமேஸ்வரி தலைமை காவலர் திருமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் திரு. கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |