Categories
தேசிய செய்திகள்

வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்கும் நபர்களுக்கு… 40% மானியம் கிடைக்கும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

உங்கள் வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதற்கு 40% வரை அரசு மானியம் தருகின்றது. அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இன்று நாம் பார்க்கலாம்.

நாட்டில் பல்வேறு இடங்களில் கூரைகள் மீது சோலார் பேனல் நிறுவும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் 2022ஆம் ஆண்டுக்குள் 4000 மெகாவாட் திறன் கொண்ட கூரைகள் மீது குடியிருப்பு பகுதிகளில் மானியத்துடன் அமைப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்கே சிங் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை கூட்டத்தொடரில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

தனி வீடுகளின் கூரைகளில் 3 கிலோ வாட் சோலார் பெறுவதற்கு அரசு 40% மானியம் வழங்குகிறது. 3 முதல் 10 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் பதிவுகளுக்கு 10% மானியம் தருகின்றது. இந்த சோலார் பேனல்களை எங்கு வாங்கலாம்? சோலார் பேனல்களை நாம் மாநில அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தை தொடர்புகொண்டு பெறமுடியும். அனைத்து மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இதற்கான அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தனியார் விற்பனையாளர்கள் இடமும் இந்த சோலார் கருவிகள் கிடைக்கின்றது. இதற்கு மானியம் பெறுவதற்கு இதில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் வாங்கும் சோலார் பேனல்கள் 25 வருடம் வரை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் செயல்படும்.

Categories

Tech |