வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கந்திலி அருகே இருக்கும் செல்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி ராமரோஜா. இத்தம்பதியினர்க்கு ஏழுமலை என்ற மகனும் புனிதா என்ற மகளும் இருக்கின்ற நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகின்றார்.
செல்வராஜ், ராமரோஜா, மருமகள் அம்சா, பத்து மாத பெண் குழந்தை ஆகியோர் செவ்வாதூர் பகுதியில் வசித்து வந்த நிலையில் செல்வராஜ் இரவு நேரம் பாதுகாவலராக பணியாற்றி வருகின்றதையடுத்து இரவு வேலைக்காக திருப்பத்தூர் சென்று விட்டார். இரவு 10 மணி அளவில் ராமரோஜா வழக்கம் போல் தனது மருமகளை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வீட்டின் வெளியே இருக்கும் திண்ணையில் தூங்க சென்றுவிட்டார்.
நேற்று காலை வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் அம்சா அக்கம் பக்கத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதையடுத்து அக்கபக்கத்தினர் வந்து பார்த்தபொழுது கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து செல்வராஜ் போலீஸிடம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.