முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபகாலமாக கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தக்க நடவடிக்கை எடுக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஆர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது 35 வயது மதிக்கத்தக்க பெண் வீட்டிற்குள் நுழைந்தார்.
இதனை அடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் ஆர்த்தியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி அவர் அணிந்திருந்த 2 1/2 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தீபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகையை பறித்து சென்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.