இரண்டு வீடுகளில் கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் தையல் தொழிலாளியான ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. இதனால் ஜெயந்தி எழுந்து பார்த்த போது வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து ஜெயந்தி அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் என்ஜினீயரான சத்யராஜ் என்பவரது வீட்டிலிருந்த மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அம்பேத்கர் நகரில் வசிக்கும் அருண் குமார் என்பவர் 2 வீடுகளிலும் திருடியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.