Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்து… 14 பவுன் நகை திருடிய பெண் கைது…!!!

வீட்டிற்குள் நுழைந்து 14 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் நெகமம் காட்டம்பட்டியில் வசித்து வருபவர் கிரி கதிரவேல்(54). இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து துக்க நிகழ்ச்சிக்கு போயிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரி கதிர்வேல் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக கிரி கதிர்வேல் நெகமம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் கதவு உடைக்காமல் பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருடு போனது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து காட்டம்பட்டி தோட்ட பகுதி உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வசித்த ரேவதி என்ற பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அதற்கு ரேவதி முன்னும் பின்னுமாக முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் சந்தேகமடைந்து விசாரணையை தீவிரமாக நடத்தினர். அந்த விசாரணையில் கிரி கதிர்வேல் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு அவர் வீட்டின் முன்னுள்ள சலவை இயந்திரத்தில் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து பீரோவில் இருந்த 14 பவுன் நகையும், 4,500 ரூபாய் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் ரேவதி மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த நகை, பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |