வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று திடீரென 4 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை அருகில் அமைந்துள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.