பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் சத்தியகாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த சத்திய காந்தாவின் குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீளமுடைய பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.