பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிற்கும், முத்து சொல்வதற்கும் இடையே பொதுபாதை சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் முத்துச்செல்வம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.