பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷின் தயாரான லட்சுமியை மூர்த்தி கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த லட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.