முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப் புதூர் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரியதம்பி என்பவருக்கும் இடையே பொங்கல் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டதால் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சரவணகுமார் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் பெரியதம்பி அங்கு சென்றுள்ளார். அதன் பிறகு பெரியதம்பி சரவணகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனை அடுத்து காயமடைந்த சரவணகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சரவணகுமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெரிய தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.