Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வீட்டிற்குள் நுழைந்த 10 அடி மலைப்பாம்பு” அலறி அடித்து ஓடிய குடும்பம்…. வாலிபர்களின் வீரச்செயல்….!!!!!

வீட்டிற்குள் நுழைந்த மலைப்பாம்பை வாலிபர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சகாதேவன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று அருகில் இருந்த காட்டு பகுதிகளில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று  நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  சகாதேவனின் குடும்பத்தினர் அலறி அடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி வாலிபர்கள் சகாதேவனின் வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அந்த பாம்பை கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |