திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூங்கில்குடி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சக்திவேல் வெளியே சென்ற பிறகு லட்சுமி காபி போடுவதற்காக பிரிட்ஜில் உள்ள பாலை எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பிரிட்ஜ் அருகே நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது. இதனை பார்த்து லட்சுமி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். சிலர் கார்த்திகை தினத்தில் நல்ல பாம்பு வீட்டில் படம் எடுத்து ஆடுவது நல்லது எனவும், அதனை வெறும் வயிற்றுடன் அனுப்பாமல் பால் வைக்கும் படியும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து லட்சுமி பாத்திரத்தில் பாலை ஊற்றி பாம்பு முன் வைத்த பிறகும் பாலை குடிக்காமல் பாம்பு தொடர்ந்து படமெடுத்து ஆடியதால் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் 3 அடி நீளமுடைய பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். பின்னர் பாம்பு வீட்டிற்குள் வந்தால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், இது போன்ற செயல்களை செய்யக்கூடாது எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.