வீட்டுக்குள் புகுந்து வாலிபர் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே இருக்கும் இந்திரா நகரில் மாரியம்மாள் என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த வாரம் இரவு நேரத்தில் உறவினர்களுடன் பேசி விட்டு மாரியம்மாள் செல்போனை வீட்டில் வைத்துள்ளார். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த போது செல்போன் காணாமல் போனதை கண்டு மாரியம்மாள் அதிர்ச்சடைந்தார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் சாலமன் என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது இரவு 12 மணிக்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மாரியம்மாள் வீட்டிற்குள் சென்று ஒரு நிமிடத்தில் வெளியே ஓடுவதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாறியம்மாள் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து தப்பியோடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.