வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் தங்க நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மட்லாம்பட்டி கிராமத்தில் வெங்கிடியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டிற்குள் சென்று வெங்கிடியம்மாவை மிரட்டி மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து வெங்கிடியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கேங்குசெட்டியை சேர்ந்த விஜயகுமார் என்பது மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 2 1/4 தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.