வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். டீக்கடை நடத்தி வரும் இவருக்கு அருக்காணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அருக்காணி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு இருட்டாக இருந்ததால் அந்த மர்மநபர் திடீரென அருக்காணி அணிந்திருந்த 61/2 தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அருக்காணி உடனடியாக பரமத்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.