Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள்…. தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!!

தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயமடைந்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூனையானூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக அந்த பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நாய்கள் தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி கடிக்கிறது.

நேற்று முன்தினம் தெரு நாய்கள் கிராமத்தை சேர்ந்த ஜோதி, சின்னக்கண்ணு உள்பட 8 பேரை கடித்து குதறியது. இதனால் காயமடைந்த 8 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே தெரு நாய்களின் தொந்தரவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |