Categories
சென்னை மாநில செய்திகள்

வீட்டிற்குள் 10 அடி ஆழத்திற்கு திடீரென ஏற்பட்ட பள்ளம்…. பெருக்கெடுத்த வெள்ளம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை போல சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் ஜெகதீஷ் தெருவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் கனமழை காரணமாக சாலைகள் மற்றும் வீடுகளில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வருகிறது.

அதன்படி ஜெகதீஷ் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வரவேற்பறைக்குள் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. தரை தளத்திற்கு கீழே வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வீட்டின் வரவேற்பறை தற்போது கால்வாய் போல மாறியுள்ளது. 4 மாடி குடியிருப்பில் கீழ் தளத்திற்கு கீழே வெள்ளம் பாய்வதால் வீடுகளை காலி செய்து விட்டு குடியிருப்புவாசிகள் வெளியேறி வருகின்றனர். திடீரென வீட்டிற்குள் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |