Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அழைத்து சென்ற தந்தை…. சடலமாக மீட்கப்பட்ட பெண்…. புதுகோட்டையில் பரபரப்பு…!!.

காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் ரஞ்சித்குமார், ரேவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ரேவதியின் தந்தையான நல்லதம்பி என்பவர் தனது மகளையும், இரண்டு பேரக் குழந்தைகளையும் தன்னுடன் பளுவான்குடியிருப்பு பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து ரேவதி கடந்த 14-ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து நல்லதம்பி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் அவ்வழியாக சென்றவர்கள் துர்நாற்றம் வீசும் அந்த பகுதியில் சென்று பார்த்த போது அங்கு இளம்பெண் மரத்தில் பிணமாக தொங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த மரத்தில் சடலமாக தொங்கி கிடந்தவர் ரேவதி என்பதை கண்டறிந்துள்ளனர். அதன் பின்  ரேவதியின் சடலத்தை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் இது தற்கொலை தானா ?அல்லது எவரேனும் கொலை செய்துவிட்டு ரேவதியை தூக்கில் தொங்கவிட்டுள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |