சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சித்தேரிகரை பகுதியை சேர்ந்த மணி(75) என்பவர் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து குளிக்க வைப்பதாக கூறி மணி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.