Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அழைத்து சென்று கை, கால்களை கட்டி…. சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த தொழிலாளி…. நீதிபதியின் தீர்ப்பு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐபிகானப்பள்ளி பகுதியில் சுப்பிரமணி(37) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு சுப்ரமணி அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியை வீட்டில் அழைத்து சென்று கை, கால்களை கட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என சுப்பிரமணி சிறுமியை மிரட்டியுள்ளார்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |