Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த பெண்… மர்மநபர் செய்த செயல்… போலீஸ் வலைவீச்சு…!!

நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து தங்கதாலி மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள பெரியபட்டினம் புதுக்குடியிருப்பு பகுதியில் செல்வம் என்பவர் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியம்மாள் மருத்துவ செலவிற்காக ராமநாதபுரத்தில் உள்ள அவரது சகோதரரிடம் 10,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை வாங்கிகொண்டு பாண்டியம்மாள் அரசு பேருந்தில் ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினத்திற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவன் பாண்டியம்மாளை வழிமறித்துள்ளார். மேலும் அந்த நபர் பாண்டியம்மாள் அணிந்திருந்த 4 பவுன் தங்கதாலி மற்றும் கையில் வைத்திருந்த பணப்பையை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாண்டியம்மாள் உடனடியாக திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்த மர்மநபரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |