Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற உறவினர்…. மர்மமாக இறந்து கிடந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா இறந்து விட்டதால் வீரமுத்து தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமுத்துவின் தம்பி மகன் அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீரமுத்து கட்டிலில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடல்நலக்குறைவு காரணமாக வீரமுத்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |