வாகன சோதனையின் போது பறக்கும் படை அதிகாரிகளால் 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுபான கடையில் பரங்கிநாதபுற பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு 1,96,560 ரூபாயை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார்.
அப்போது பரங்கிநாதபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து சரவணகுமாரின் மோட்டார் சைக்கிளை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவரிடம் 1,96,560 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த பணத்திற்கான சரியான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.