Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை ரயில்வே குடியிருப்பில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டயானா என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் டயானா மாலை நேரத்தில் கல்லூரியில் இருந்து பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பேருந்திலிருந்து இறங்கி டயானா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கையில் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து டயானா பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |