Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற காவலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் தெற்கு தெருவில் முப்பிடாதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முப்பிடாதி வேலைக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு சைக்கிளில் திரும்பிக் வந்து கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து முப்பிடாதியின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முப்பிடாதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே முப்பிடாதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |