Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கொத்தனார்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் பேருந்து மோதிய விபத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற கொத்தனார் படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் அண்ணாநகரில் கொத்தனாரான சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் பெருமநாடு தனியார் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து சக்திவேல் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் பேருந்தின் ஓட்டுநரான சேகர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |