மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கம்பாளையம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருத்துவமனை அவுட் போஸ்ட் காவல் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணியம் தேர்தல் பணிகளை முடித்து விட்டு நள்ளிரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சின்னியம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுப்ரமணியம் மோட்டார் சைக்கிளில் இருந்த நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
இதனால் படுகாயம் அடைந்த சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுப்ரமணியத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.