பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்களூர் திருவள்ளுவர் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் கொத்தனாரான ராஜா என்பவருடன் காட்டுப்பட்டிக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் விக்னேஷும், ராஜாவும் இணைந்து இந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த மாணவிகள் அலறி சத்தம் போட்டதால் அச்சத்தில் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் தெரிவித்தும் காவல்துறையினர் நீண்டநேரமாகியும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் கோபமடைந்த மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் பெருங்களூர்-மேட்டுப்பட்டி இடையேயான சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷ் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.