அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சுங்கசாவடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரப்பட்டு பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வேலை முடிந்த பிறகு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து புழல் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.