இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுகுறிச்சி பகுதியில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் ஆல்பர்ட் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தேங்காப்பட்டணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆல்பர்ட்டின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆல்பர்ட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 சிறுவர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆல்பர்ட்டின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.