Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமலாபுரத்தில் ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் வெங்காய மூட்டைகளை கடைகளுக்கு கொண்டு போடுவதற்கு ராஜ் ஆட்டோ ஒன்று வைத்திருந்தார். இந்நிலையில் ராஜ் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இவர் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஊத்துப்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |