Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற புதுமாப்பிள்ளை…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் லாவண்யா என்ற பெண்ணை பொன்ராஜ் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலை முடிந்து பொன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் டி.என் புதுக்குடி பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பொன்ராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பொன்ராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |