மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பல்பாக்கி கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் பணி முடித்து விட்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கரும்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.