Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த நபர்…. எரிந்து சாம்பலாகி கிடந்த குடிசை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

குடிசைக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் சாமுவேல் தான் வளர்த்து வரும் மாடுகளை காலை நேரத்தில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தனது குடிசை வீடு எரிந்து சாம்பலாகி கிடப்பதை பார்த்து சாமுவேல் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் சாமுவேலின் குடிசைக்கு தீ வைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |