Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த கணவர்….. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் செல்வம் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 23-ஆம் தேதி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தனுசியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனுசியா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுசுயாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் செல்வமூர்த்தி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது தனுசியா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனுசியாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |