Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த தந்தை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சங்கர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |