Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி ஜான் கென்னடி நகரில் பிரதாப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஹேமாவதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் தனது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |