வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற விஜயகுமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் விஜயகுமாரின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் உள்ள புங்கை மரத்தில் விஜயகுமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.