முன் விரதத்தை மனதில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சேப்பாக்கத்தில் வசிக்கும் சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் மற்றும் சதீஷூக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக கத்தியால் தாக்கிக் கொண்டனர். அப்போது கோபமடைந்த சதீஷ் தனது தம்பியான தினேஷ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சுரேஷின் மைத்துனரான அப்பு என்பவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
அதன்பிறகு சுரேஷின் மாமியார் வீட்டிற்கு அவர்கள் தீ வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுரேஷின் மனைவியான ஜெனிபர் என்பவரை சதீஷ் தரப்பினர் தாக்கி தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.