அந்தியூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியை சேர்ந்த விஜயராகவன் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். விஜய் ராகவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில். விஜயராகவனுக்கும், அவரது தங்கை உறவு முறையிலான கலையரசி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த விஜயராகவன் மற்றும் கலையரசி ஆகிய இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று இரவு 10 மணி அளவில் அந்தியூர் அடுத்த ஜே ஜே நகர் பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.