Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பட்டி கிராமத்தில் தியாகராஜ கேசரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜ கேசரி தான் வாங்கி இருக்கும் புது வீட்டில் இருந்து பழைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தியாகராஜன் கேசரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |