Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த கணவர்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் அழகேசன் நகரில் விஜயவேல்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஜயவேல் ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் விஜயவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ரம்யாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திருமணத்திற்கு பிறகு ரம்யா வேலைக்கு செல்வதாக கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு விஜயவேல் மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த ரம்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |