Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்கு வந்த தபால்…. “1 லட்ச ரூபாயை இழந்த ஆசிரியர்”…. போலீஸ் விசாரணை …!!

ஆசிரியரிடம் 1 லட்ச ரூபாய் பண மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

விழுப்புரம் மாவட்டத்தில் ஜான் வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜான் வில்லியத்தின் வீட்டிற்கு ஒரு தபால் வந்துள்ளது. அந்த தபாலை ஜான் வில்லியம் பிரித்து பார்த்துள்ளார். அதில் எங்களது ஆன்லைன் நிறுவனத்தின் 13-வது ஆண்டு விழாவை முன்னிட்டு உங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜான் வில்லியம் அந்த தபாலில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய மர்மநபர் உங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது எனவும், அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய ஜான் வில்லியம் அந்த மர்மநபர் வாட்ஸ்அப்பில் அனுப்பிய வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலமாக 1,14,435 ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அந்த மர்ம நபர்  காரை அனுப்பவில்லை. எனவே ஜான் வில்லியம் அந்த நபருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த மர்ம நபர் ஜான் வில்லியமிற்கு   கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இதுகுறித்து ஜான் வில்லியம் விழுப்புரம் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணமோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |