தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செங்காடு மாதா கோவில் தெருவில் அமலோபர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோமன்ராஜ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோமன்ராஜ் வணிக கணிதம் பாடத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.
இதுபற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.