Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி ரயில்வே நகரில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தீபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |