சேலம் மாவட்டத்தில் உள்ள தென்குமரை கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கோவர்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது கோவர்த்தனன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் கோவர்தனனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.