Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வெளியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்… நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபருக்கு வலைவீச்சு..!!

பெரம்பலூரில் இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் கிழக்குத் தெருவில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அண்ணாதுரை வெளிநாட்டிலும், மகன் பெங்களூருவிலும் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் அலமேலு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அலமேலு அவர் வளர்த்து வரும் ஆடுகளுக்கு பாதுகாப்பாக வீட்டிற்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் அலமேலு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை உள்ளாடை அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் அலமேலு திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய திருடனை பின்தொடர்ந்தனர். ஆனால் மின்னல் வேகத்தில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து வழக்குப்பதிந்த பெரம்பலூர் காவல்துறையினர் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |